27 நட்சத்திரக் கோயில்கள்
0₹90.00இந்நூலில் ஒவ்வொரு நட்சத்திரத்தின் அதிதேவதை, பரிகாரம், பரிகாரத் தலத்தின் சிறப்பு, அமைவிடம், தல மரம், தலவரலாறு உள்ளிட்ட பல தகவல்கள் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: கொத்தமங்கலம் லேனா
48 முதுநிலை திருக்கோயில்கள்
0₹320.00இந்திய கோயில்களில் தமிழ்நாட்டுக் கோயில்களை வேறுபடுத்திக் காட்டுபவைகளில் மிகவும் முக்கியமானவை அதன் கோபுரங்கள். கோபுரங்களைப் பொறுத்தவரை, ஊரில் எங்கிருந்து பார்த்தாலும் கோயில் தெரிய வேண்டும் என்பதற்காக உயரமாகக் கட்டப்பட்டன. அத்தகு பிரமாண்டமாகத் தோற்றம் பெற்றிருக்கும் முதுநிலைத் திருக்கோயில்களின் வரலாறுகளைச் சுருக்கமாக எடுத்துரைக்கும் நூலாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆக்கம்: பதிப்புக் குழு
Kanthar Anupoothi (English)
0₹200.00இந்நூலில் முருகப்பெருமானின் திருவிளையாடல்கள், ஊர்தி, படை, கொடி, அடியார்கள் பெற்ற அனுபவங்கள் முதலானவை விளக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்: சத்தியவேல் முருகனார்
Thiru Murugattru Padai (English)
0₹200.00அறுபடை வீடுகளில் கொலுவிருக்கும் முருகப்பெருமானின் அருட்திறம், அத்தலத்தின் பெருமை போன்றவை இந்நூல் வழியே விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்
அகத்தியர் இரணநூல்
0₹40.00இரண வைத்தியம் பற்றிய செய்திகளோடு இயற்கை மூலிகைகளால் நோய்களைக் குணப்படுத்துவது குறித்தும் இந்நூல் எடுத்தியம்புகிறது.
ஆசிரியர்: அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ வெளியிட்டுக்குழு
அகத்தியர் கன்மகாண்டம்–300
0₹100.00குன்மம், நீரிழிவு, சயம், எருவாய், பாண்டு, மந்தாக்கினி, மேகம் முதலிய நோய்களைக் குணப்படுத்துவதற்கான ஒரு தலைசிறந்த மருத்துவ வழிகாட்டி இந்நூல்.
ஆசிரியர்: அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ வெளியிட்டுக்குழு
அகத்தியர் பள்ளு இருநூறு
0₹200.00நோய்க்குரிய மருந்து, தயாரிக்கும் மருத்துவ முறை, அதனை உட்கொள்ளும் காலம் போன்ற குறிப்புகளை உள்ளடக்கியது இந்நூல்.
ஆசிரியர்: அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ வெளியிட்டுக்குழு
அங்காதி பாதம்
0₹200.00இந்நூலானது நம் உடலில் தலை முதல் கால் வரையுள்ள உறுப்புகளைப் பாதுகாக்கும் வழிமுறையை விளக்குகிறது.
ஆசிரியர்: அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ வெளியிட்டுக்குழு
அபிராமி அந்தாதி
0₹100.00திருக்கடையூர் அபிராமி அம்மையைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு இந்நூல் பாடப்பட்டுள்ளது.
ஆசிரியர்: வித்துவான் தி.பட்டுச்சாமி ஓதுவார்
அரிச்சந்திரன் கதை
0₹50.00உண்மையின் குறியீடாய் வாழ்ந்த அரிச்சந்திரன் கதையினை எளிய நடையில் இந்நூல் விளக்குகிறது.
ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்
அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி
0₹190.00கந்தரனுபூதி உரையுடன் பாடல்களுக்கான பொழிப்புரை, சுருக்க உரை, குறிப்புரையும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: வா.சு.செங்கல்வராயனார்
அருளாளர்கள்
0₹250.00தமிழ் மக்களிடையே இறைப்பற்றை வளர்த்த சமயச் சான்றோர்களின் இறைத்தொண்டினைப் பறைசாற்றுகிறது இந்நூல்.
ஆசிரியர்: அ.ச.ஞானசம்பந்தன்
அர்த்த பஞ்சகம்
0₹180.00இறைவனின் இயல்பு, ஆன்மா அடையும் பயன், அப்பயனை அடைவதற்குரிய வழிகள் முதலானவை இந்நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
ஆசிரியர்: ந.சுப்பு ரெட்டியார்
அறஞ்சொல் அக்கினி புராணம்
0₹280.00இறைவனை வழிபடுவதற்கு நாம் ஆலயம் அமைக்கின்றோம். அவ்வாறு அமைப்பதற்கான முறைகள், ஆலயம் அமைப்பவர் அடையும் பலன்கள், இறைவனின் திருமேனி எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் போன்ற விளக்கங்களும் ஆலயம் அமைக்க தேர்ந்தெடுக்கக்கூடிய நிலம், அதன் தன்மை, எந்த ஆலயத்தில் எந்தத் தெய்வங்களை எங்கு நிறுவி வழிபட வேண்டும் போன்ற விளக்கங்களுடன் கூடிய பல செய்திகளைக் கொண்டு இந்நூல் திகழ்கிறது.
ஆசிரியர்: ஜெயசித்தகன்
அறநூல் தந்த அறிவாளர்
0₹60.00இந்நூலில் இடம்பெற்றுள்ள திருவள்ளுவர், ஔவையார், சமண முனிவர்கள் போன்றோரின் நீதி மொழிகள் ஒவ்வொன்றும் அடிக்கோடிட்டு வாசிக்கத் தூண்டுகின்றன.
ஆக்கம்: பதிப்புக் குழு
அறுபடை வீடுகள்
0₹120.00திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் ஐந்தாம் படை வீடான திருத்தணிக்குச் சென்று தன் கோபத்தை தணித்துக்கொண்டு சாந்தமானதால், ‘தணிகை’ என்று இந்த ஊருக்குப் பெயர் வந்தது. அறுபடை வீடுகளில் கடைசியாக வரும் படைவீடு, அழகர்மலை மீது இருக்கக்கூடிய பழமுதிர்ச் சோலை ஆகும்.
ஆசிரியர்: கொத்தமங்கலம் லேனா
அனுபோக வைத்திய நவநீதம் திறவுகோல்
0₹250.00சித்த மருத்துவம் குறித்த செய்திகளும், நோய்களுக்கான தீர்வுகள் குறித்தும் இந்நூல் விளக்குகிறது.
ஆசிரியர்: அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ வெளியிட்டுக்குழு
அஷ்டப்பிரபந்தம்
0₹490.00இந்நூல் ‘அஷ்டப் பிரபந்தம்‘ என்று திட்டமிட்டு எழுதப்பட்ட நூலன்று . ஆசிரியர் மனமுவந்து மாலிடம் காதலாகிக் கனிந்து பாடியவை. பின்னர் எட்டுத் தனித்தனி நூல்களையும் இணைத்து ‘அஷ்டப் பிரபந்தம்‘ என்று பெயர் சூட்டப்பட்டது. ஆழ்வார்களின் அருளிச் செயல்களுக்கு நாலாயிரம் என்று இட்டதுபோல் இந்நூலுக்கு ‘அஷ்டப் பிரபந்தம்‘ எனப் பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்: ஜெயசித்தகன்
ஆடவல்லான் ஆதிரை வழிபாடு
0₹50.00ஐந்தொழில் நடனம் புரியும் ஆடல்வல்லானாகிய நடராஜப் பெருமானின் ஆருத்ரா தரிசன சிறப்புகளையும், இறை வழிபாட்டின் வகைகளையும் எடுத்துரைக்கும் விதமாக இந்நூலில் அமையப் பெற்றுள்ளது.
ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள் பாகம் 1
0₹510.00உலகத்தில் உள்ள உயிருள்ள, உயிரற்ற அனைத்திலும் இறைவன் மகாவிஷ்ணு நிரம்பி இருக்கின்றான். இதன் காரணமாக வேதங்கள் “விஸ்வம்” என்று கூறுகின்றன. அண்டங்கள் முதல் அணுவரை அவன் ஆட்சியே நடைபெறுகிறது. கம்பநாடன் தன்காவியத்தில் ‘உலகம் யாவையும்’ என்றும் ‘இவனே அனைத்திற்கும் ஆதாரம்’ என்றும் வணங்கிப் போற்றுகிறார்.