Description
தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு வாழ்க்கைமுறை ஆகியவற்றைத் தமிழகக் கோயில்கள் தொடர்ந்து பிரதிபலித்து வந்திருக்கின்றன. தமிழில் சங்ககாலப் பாடல்களிலேயே கோயில்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
நூலறி புலவர் நுண்ணிதில் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து
என நெடுநல்வாடையில் கோயில் குறித்து குறிப்பிடப்படுகிறது. இந்திய கோயில்களில் தமிழ்நாட்டுக் கோயில்களை வேறுபடுத்திக் காட்டுபவைகளில் மிகவும் முக்கியமானவை அதன் கோபுரங்கள். கோபுரங்களைப் பொறுத்தவரை, ஊரில் எங்கிருந்து பார்த்தாலும் கோயில் தெரிய வேண்டும் என்பதற்காக உயரமாகக் கட்டப்பட்டன. அத்தகு பிரமாண்டமாகத் தோற்றம் பெற்றிருக்கும் முதுநிலைத் திருக்கோயில்களின் வரலாறுகளைச் சுருக்கமாக எடுத்துரைக்கும் நூலாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆக்கம்: பதிப்புக் குழு
Reviews
There are no reviews yet.