Description
தன் பெயரே மந்திரமாகக் கொண்டவர் பெருமான். அஸ்தினாபுரத்தில் கௌரவர் சபையில் பாஞ்சாலி அவமானப்படுத்தப்படுகின்றாள். அச்சமயம் கிருஷ்ண பகவான் சால்வன் என்னும் மன்னனிடம் போர் புரிந்து கொண்டு இருக்கின்றான். அந்த நேரம் அபலையாக நின்று சபையில் அலறிய பாஞ்சாலி தன்னைக் காக்க பகவானின் திருநாமத்தைக் கூறி கதறுகின்றாள். கணவர்களாலும், பீஷ்மர் போன்ற பெரியவர்களாலும் காப்பாற்ற முடியாத அவளின் மானத்தை பகவான் திருநாமம் காப்பாற்றுகிறது. இச்சம்பவம் நிகழ்ந்த போது அங்கு அவமானப்படுத்தப்பட்ட பாஞ்சாலிக்கு ஆதரவாக பகவானின் திருநாமம் மட்டுமே இருந்தது.
பீஷ்மர் பாரதப் போரில் பத்தாம் நாள் யுத்தத்தில் அம்புப் படுக்கையில் கிடக்கலானார். அந்த நிலையில் கிடக்கும் பீஷ்மர் உடம்பிலிருந்து துரியோதனனிடம் சாப்பிட்ட உணவு எல்லாம் ரத்தமாக வெளியேறுகிறது. ஆயினும் உடம்பு தீயாக எரிகிறது. அதனைப் போக்கிக் கொள்ள அவரால் முடியவில்லை; அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார். அவரை வணங்க பீஷ்மரால் முடியவில்லை. அச்சுதனை உள்ளத்தில் அர்ச்சனை செய்து அவனின் ஆயிரம் திருநாமங்களையும் அவர் சொல்கின்றார். அந்த நாமங்களை அவர் சொல்லச்சொல்ல அவர் உடம்பில் ஏற்பட்ட துன்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முடிவில் இல்லாமல் போய்விடுகிறது.
Reviews
There are no reviews yet.