Description
அறுபடை வீடுகளில் முதல்படை வீடு திருப்பரங்குன்றம். முருகன், சூரபத்மனை போரில் வென்று இந்திரன் மகள் தெய்வானையை மணமுடித்து மணக்கோலத்தில் இங்கு காட்சி தருகிறார்.
முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் கடலோரத்தில் அமைந்துள்ளதால் ‘திருச்சீரலைவாய்’ என்றும் ‘ஜயந்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு முருகப்பெருமான் சூரபத்மனை அழித்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது. மேலும் குரு தலமாக விளங்குகிற இத்தலம் உலகளவில் பிரசித்தி பெற்றது. மூன்றாம் படைவீடான பழநியில், ஞானப்பழம் அடைய வேண்டி தன் தமையன் பிள்ளையாருடன் ஏற்பட்ட போட்டியில் தோற்றதால் பழநியில் தண்டாயுதபாணியாகக் காட்சி தருகிறார். மகன் முருகனை குருவாக ஏற்று தந்தை சிவபெருமான் சீடனாக அமர்ந்து ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை உணர்ந்து கொண்ட நான்காம் படை வீடு சுவாமிமலை.
திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் ஐந்தாம் படை வீடான திருத்தணிக்குச் சென்று தன் கோபத்தை தணித்துக்கொண்டு சாந்தமானதால், ‘தணிகை’ என்று இந்த ஊருக்குப் பெயர் வந்தது. அறுபடை வீடுகளில் கடைசியாக வரும் படைவீடு, அழகர்மலை மீது இருக்கக்கூடிய பழமுதிர்ச் சோலை ஆகும்.
ஆசிரியர்: கொத்தமங்கலம் லேனா
Reviews
There are no reviews yet.