Description
கமலாலயச் சிறப்பு என்றும், கமலாலய புராணம் என்றும், கமலாலய மஹாத்மியம் என்றும் வழங்கும் இத்திருவாரூர் புராணம் சிதம்பரம் ஸ்ரீ மறைஞான சம்பந்த நாயனார் என்ற முனிவரால் இயற்றப்பெற்றது. இந்நூலின் பாயிரச் சருக்கம் 25-ஆம் பாடலினால், இதன் காலம், கலியப்தம் 4647-ஆம் ஆண்டின் பின்னதாகிய பராபவ வருஷம் சாலி. 1469, (கி.பி. 1547) என்பது தெரிய வருகின்றது. அவரியற்றிய பதி, பசு, பாசப் பனுவல் என்னும் நூலின் சிறப்புப் பாயிரத்தில், ‘ஆதி கமலாலயமுதற் புராண மோது மதியாற் சூதனை யொப்போன்’ என்னும் பகுதியாலும், இந்நூல் அவர்களால் இயற்றப் பெற்றதே என்பது வலியுறும். இவ்வாசிரியர் சிதம்பரத்தில் குகைமடத்தில் வசித்து வந்தன ரென்றும், மறைஞான சம்பந்த தேசிகர் என்பன போன்ற வேறு பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனரென்றும், இவர் இப்புராணமேயன்றி அருணகிரிப்புராணம், பதிபசுபாசப் பனுவல், சங்கற்ப நிராகரணம், சில கற்பங்கள் முதலிய வேறு பல நூல்களையும் இயற்றியுள்ளார் என்றும் தெரிய வருகிறது.
ஆசிரியர்: மறைஞான சம்பந்த நாயனார்















Reviews
There are no reviews yet.