Description
உலகத்தின் கரை எனப்படும் இமயமலைத் தொடரில் ஓர் ஆன்மிகச் சிகரமாய் விளங்குவது கயிலை மலை ஆகும். திருமலை என்பது கயிலையைக் குறிக்கும் மற்றொரு பெயர். இது. ‘அனைவராலும் வணங்கப்படும் தெய்வத்தன்மை வாய்ந்த அழகிய மலை’ என்று போற்றப்படுகிறது. காரைக்கால் அம்மையார் வடதிசைத் தலங்களையெல்லாம் வழிபட்டு பல திருப்பதிகங்கள் பாடி கயிலையில் சிவபெருமானைக் காணும் வேட்கையோடு இறுதியில் கயிலைமலை வந்தார். காலால் திருமலையை மிதிப்பது பாவம் என்று எண்ணி தலையால் நடந்து சென்றதும் இங்குதான். திருநாவுக்கரசரோ கயிலாய ஈசனைக் காணும் பேற்றைத் தெற்கே உள்ள திருவையாற்றில் பெற்றார். கயிலைக்காட்சி கண்டு மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினார். வடக்கே வடகயிலாயம் இருப்பதுபோல் தெற்கே தென்கயிலாயம் இருந்துள்ளது. இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: திரு. வி. கலியாணசுந்தரனார்
Reviews
There are no reviews yet.