Description
சைவ அடியவர்களையே “நாயன்மார்கள்” என அழைக்கின்றனர். இவர்களைச் சிவனடியார்கள் எனவும், சிவத்தொண்டர்கள் எனவும் கூறுவர். இவ்வடியார்களுடைய தெய்வீக வரலாற்றைக் கூறிப் புகழ்பாடுவது பெரியபுராணம் என்னும் காப்பியமாகும். ஈசனின் பரிபூரண அருளைப்பெற்ற நாயன்மார்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சிறப்பு உண்டு.
உதாரணத்திற்கு, பஞ்சம் வந்த காலத்தில் சிவபெருமானின் திருவருளினால் தினமும் ஒவ்வொரு பொற்காக பெற்று தொண்டு செய்து வந்தவர் புகழ்த்துணை நாயனார். சோழநாட்டின் சேனாதிபதி போருக்குச் சென்ற காலத்தில் சிவபெருமானுக்குப் படைக்க தாம் சேமித்துவைத்த நெல்லை உண்ட சுற்றத்தார் அனைவரையும் கொன்று நேர்மையை நிலைநாட்டியவர் கோட்புலி நாயனார். சமணத்தில் உழன்ற மன்னரையும் நாட்டையும் காத்திட திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வந்து தம் கணவரை சைவராக்சி சைவத்தை மீட்ட மங்கையர்க்கரசியார். சிவனடியார்களுக்குக் கோவணம், உடை, கீள் முதலியவற்றைக் கொடுத்து தொண்டு புரித்தவர். நேச நாயனார். திருவானைக்கா மதில் பணி செய்து எழுபது மாடக்கோயில்களைக் கட்டியவர் கோச்செங்கட் சோழ நாயனார். இவ்வாறு 63 நாயன்மார்களுடைய தெய்விக வரலாறும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்: கி. வா. ஜகந்நாதன்
Reviews
There are no reviews yet.