Description
பெரியபுராண நூலாசிரியர் சேக்கிழார் தொண்டை நாட்டில் குன்றத்தூரில் பிறந்தவர். இயற்பெயர் அருண்மொழித் தேவர். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழன் அவையில் முதல் அமைச்சராகத் திகழ்ந்தவர். சோழன் இவருக்கு உத்தம சோழப்பல்லவன் என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்தான். அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று, அடியார்களின் வரலாறாகப் பெரியபுராணத்தை எழுதினார். இவருடைய காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியாகும்.
பெரியபுராணம் என்பது சைவசமய அடியார்களின் வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும் இந்நூலிற்குத் திருத்தொண்டர் புராணம் என்ற மற்றொரு பெயரும்
உண்டு. சைவசமய இலக்கியங்களைப் பன்னிரு திருமுறை என்று அழைப்பர். இதில் பன்னிரண்டாம் திருமுறையாகப் பெரியபுராணம் விளங்குகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றிலும், சைவ சமய உலகிலும் மிகச்சிறந்த இடத்தைப் பெரியபுராணம் பெற்று விளங்குகின்றது. இத்தகு சிறப்பு வாய்ந்த இதன் ஆசிரியர் சேக்கிழாரின் வரலாறு, இறைத்தொண்டு ஆகியவற்றோடு பெரியபுராணத்தைப் பற்றி ஆராய்ச்சி நோக்குடன் இந்நூல் விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: கா. சுப்பிரமணியனார்
Reviews
There are no reviews yet.