Description
சிற்றம்பலம் என்றால் சிறியவெளி என்று பொருள் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுடைய இதயத்திலும் ஒரு சிறியவெளி இருக்கிறது. அந்த வெளிக்குள், கட்டைவிரல் அளவுக்கே உள்ள ஆன்மாவிற்குள் ஆன்மாவாக இறைவன் கூத்தாடிக்கொண்டிருக்கிறான் என சிவ ஆகமம் கூறுகிறது. இதனை உணர்ந்து உய்வதற்காகவே எம்பெருமான் ஈசன் தில்லையில் திருக்காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது. சைவ மரபில் கோயில் என்றால் அது தில்லைச் சிதம்பரத்தைத்தான் குறிக்கும் என்பர் சைவர். ‘செல்வர்வாழ் தில்லையில் நடராசப்பெருமான் தாள் பணிவதே பெரும் செல்வம்’ என்று திருஞானசம்பந்தரும், ‘தேன்நிலாவும் சிற்றம்பலவானராம் சபாநாயகர், வான் நிலாவி இருக்கவும் வைப்பார்’ என்று திருநாவுக்கரசரும் தில்லைச் சிதம்பரத்தைப் புகழ்கிறார்கள்.
ஆசிரியர்: கி. வா. ஜகந்நாதன்
Reviews
There are no reviews yet.