Description
மக்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு கோயிலுக்குச் சென்று பக்தியோடு இறைவனை வழிபட்டு வருகின்றனர். உண்ணாநோன்பிருந்து நேர்த்திக்கடனைச் செலுத்தி கோயிலை வலம் வந்து மந்திரம் ஓதுவதால் மன நிறைவு கொள்கிறவர்களும் உண்டு. இவர்களில் எவரும் கோயிலின் வரலாற்றையோ, அமைப்பு முறைகளையோ, கலை நுட்பங்களையோ அறிந்துகொள்வதில்லை. இந்த அறிதல் இன்மையின் விளைவாக கலைகளும் பண்பாடும் கேள்விக்குறியாகின்றன. இதனை தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் மனம் வெதும்பி கோயில்களைப் பற்றி ஆராய்ந்து அதன் அருமையை உணர்த்தியுள்ளார்.
கோயில்களைக் கண்டு அவற்றின் வரலாற்றுச் சிறப்பு, கலைநயம் ஆகியவற்றை ஆராய்ந்து அவர் எழுதியதே ‘வேங்கடம் முதல் குமரி வரை’ என்னும் இந்நூல்.
கோயில்களால் விவசாயம் வளர்ந்து கைத்தொழில்கள் பெருகியிருந்ததாகவும், கல்தச்சர் – சிற்பிகள் – வல்லுநர்கள் – கலைஞர்கள் பணியாளர்கள் என பெரும் சமூகத்தையே கோயில்கள் கட்டிக்காத்ததாகவும் பதிவிட்டுள்ளார். இப்படிப்பட்ட பல அரிய தகவல்களையெல்லாம் தன்னகத்தே கொண்டு கோயில்கள் கலைக்களஞ்சியமாகத் திகழ்ந்துள்ளதை எடுத்துக்காட்டியுள்ளார்.
ஆசிரியர்: தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான்
Reviews
There are no reviews yet.