விநாயகரின் அருளை எளிதில் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் ?

விநாயகப் பெருமான் அனைத்து விதமான துன்பங்களையும், தடைகளையும், தோஷங்களையும் நீக்கக் கூடியவர். விநாயகரின் அருளை பெறுவதற்கும் பலரும் பல விதமான வழிபாடுகளை செய்வதுண்டு. சிலர் பிள்ளையாருக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். விளக்கேற்றுவது, தேங்காய் மாலை அணிவிப்பது, பல விதமான நைவேத்தியங்கள் படைப்பது, சிதறு தேங்காய் படைப்பது போன்ற பல விதமான வழிபாடுகளை செய்வதுண்டு.

இவை எதுவும் செய்யாமல் வீட்டில் சில எளியான முறைகளில் விநாயகரை வழிபட்டு வந்தாலே, விநாயகப் பெருமானின் அருளை முழுவதுமாக பெற்று விட முடியும். அப்படி தினமும் என்னென்ன செய்தால் விநாயகரின் அருளை எளிதில் பெற முடியும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். சதுர்த்தி மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் இந்த வழிபாட்டினை செய்வது சிறப்பு.

இந்து மதத்தில் முழு முதற் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். இவர் தடைகளையும், துன்பங்களையும் நீக்கி, அதிர்ஷ்டம், வெற்றி, ஞானம், செல்வம் ஆகியவற்றை தரக் கூடியவர் என்பதால் பலரும் இவரை விருப்பமுடன் வணங்குவது உண்டு. விநாயகரை வழிபட்ட பிறகு தான் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும். எந்த ஒரு காரியத்தையும் துவக்க வேண்டும் என சொல்லி வைத்துள்ளனர். விநாயகர் மிக எளிமையான கடவுள் என்றாலும் அவரின் அருளை முழுவதுமாக பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

விநாயகரின் அருளை முழுவதுமாக பெற வேண்டும் என நினைப்பவர்கள் வீட்டில் விநாயகரின் படம் அல்லது சிலையை வைத்து தினமும் வழிபட்டு வர வேண்டும். தினமும் விநாயகர் வணங்கி, வழிபட்டு வந்தால் அவர் பாதுகாப்பு, ஞானம், அதிர்ஷ்டம் ஆகியவற்றை நமக்கு வழங்குவார். மிகவும் மென்மையான, சுத்தமான துணியை வைத்து விநாயகரின் படம் அல்லது சிலையை தினமும் சுத்தப்படுத்த வேண்டும். விநாயகரின் அடையாள குறியீடுகளை உடன் வைத்திருப்பது சிறப்பு.

விநாயகரின் உள்ளம் மகிழும் படி தினமும் வாசனையான மலர்களால் அலங்கரித்து, அருகம்புல் சாற்ற வேண்டும். மிகவும் சுத்தமான இடத்தில், மரியாதையுடன் அவரது படம் அல்லது சிலையை அலங்கரித்து வைக்க வேண்டும். பக்தியுடன் நம்மால் என்ன முடிகிறதோ, அதை அவருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். விநாயகரை எந்த நாளிலும், எந்த நேரத்திலும் வழிபடலாம். ஆனால் சதுர்த்தி, புதன்கிழமை போன்ற நாட்களில் அவரை வழிபடுவது அவரின் அருளை எளிதில் பெற்றுத் தரும்.

விநாயகரிடம் மட்டுமின்றி மற்ற தெய்வங்களிடமும் எதையும் வேண்டும் என கேட்காமல், இறைவனின் அருள் மட்டும் போதும். உன்னை வழிபட வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்று மட்டும் தான் தெரிவிக்க வேண்டும். அது மட்டுமின்றி, நமக்கு நெருக்கமானவர்களிடம் அமர்ந்து எப்படி மனம் விட்டு பேசுவோமோ, அதே போல் தெய்வத்திடமும் மனம் விட்டு பேச வேண்டும். இது கடவுளுடன் மிக விரைவில், ஒரு தெய்வீக பந்தத்தை ஏற்படுத்தும். விநாயகருக்கு எந்த பூ கிடைக்கிறதோ அதை வைத்து, அருகம்புல் வைத்து, சிறிய அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டாலும் கூட போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *