
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவு உருவாக்கப்பட்டது. இந்து சமய பக்தி நூல்களை மறுபதிப்பு செய்து நூலாக்கம் செய்யும் முதன்மை நோக்கமாக கொண்டு இப்பிரிவு செயல்ப்பட்டு வருகிறது.
மு.க.ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர் பாபு அவர்களின் கிழ் இப்பிரிவின் மூலம் பக்தி நூல்களை வெளியிடுதல், பழம்பெரும் ஓலைச்சுவடிகள் செப்பேடுகள் மற்றும் அரிய புத்தகங்கள் ஆகியவற்றை படி எடுத்து பாதுகாக்கவும் காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
பி.கே.சேகர் பாபு
மாண்புமிகு அமைச்சர் - இந்து சமய அறநிலையத்துறை

பதிப்பகப் பிரிவின் மூலம் 108 அரிய பக்தி நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியீடு

பதிப்பக பிரிவின் முக்கிய நோக்கங்கள்
- திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணங்கள், திருக்கோயில் தொடர்பான ஆகமங்களை ஆவணப்படுத்துதல்
- நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள், பழமையான அரிய நூல்களை மறுபதிப்பு செய்து நூலாக்கம் செய்தல்
- திருக்கோயில்களில் கண்டறியப்படும் பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் செப்பேடுகளைத் திரட்டி பாதுக்காத்தல் மற்றும் டிஜிட்டல் வடிவில் மாற்றம் செய்தல்
- திருக்கோயில் கட்டடக்கலை, செந்தமிழ் இலக்கியங்களை நூலாக் செய்வதுடன் குறைந்த விலையில் பக்தர்களுக்கு விற்பனை
- திருக்கோயில்கள் மற்றும் திருமடங்கள் வாயிலாக பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்திடல்
ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் அரிய புத்தகங்கள் பாதுகாப்பு
பழம்பெரும் ஓலைச்சுவடிகள் செப்பேடுகள் மற்றும் அரிய புத்தகங்கள் ஆகியவற்றை பாதுகாக்க குன்றக்குடி அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
மொத்தம் 297 கோயில்களில் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் 33 கோயில்களில் ஓலைச்சுவடிகளும் 10 கோயில்களில் செப்புப் பட்டயங்களும் ஆய்வு செய்யப்பட்டு அவற்றில் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டன.
ஓலைச்சுவடிகளின் செப்பு பட்டயங்கள் உள்ளேற்றவற்றையும் படி எடுத்து பாதுகாக்கவும் காட்சிப்படுத்தவும் எல்காட் நிறுவனம் மூலம் தமிழ் இணைக் கல்விக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது.



பதிப்பகத் துறையின் எதிர்காலத்திட்டங்கள்
- இணையதளம் வாயிலாக புத்தங்களை பெற ecommerce தளம் உருவாக்கம்.
- மறுபதிப்பு செய்யப்படும் புத்தகங்களை eBook என்று சொல்லப்படும் டிஜிட்டல் வடிவில் வெளியிடுதல்.
- கூடுதலாக 100 விற்பனை மையங்களை திருக்கோயில்கள் மற்றும் திருமடங்கள் வாயிலாக அமைத்தல்.
இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக பிரிவு குழு
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அவர்களது தலைமையில் பதிப்பக பிரிவு குழு செயல்பட்டு வருகிறது.