Description
உலகத்தில் உள்ள உயிருள்ள, உயிரற்ற அனைத்திலும் இறைவன் மகாவிஷ்ணு நிரம்பி இருக்கின்றான். இதன் காரணமாக வேதங்கள் “விஸ்வம்” என்று கூறுகின்றன. அண்டங்கள் முதல் அணுவரை அவன் ஆட்சியே நடைபெறுகிறது. கம்பநாடன் தன்காவியத்தில் ‘உலகம் யாவையும்’ என்றும் ‘இவனே அனைத்திற்கும் ஆதாரம்’ என்றும் வணங்கிப் போற்றுகிறார்.
பகவானை விடவும் அவனுடைய திருநாமத்திற்கு ஆற்றல் அதிகம் என அருளாளர்கள், ஆச்சார்யார்கள் அனுபவித்து உரைத்திருக்கிறார்கள். மக்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களை போக்கிக் கொள்ள இந்த ஆயிரம் நாமங்களும் நலம் அளிக்கக் கூடியதாகும். இதில் உள்ள ஒவ்வொரு நாமமும் நம்மை பிறவியிலிருந்து விடுவித்துப் பிறவாத யாக்கை பெற அருள்புரியக் கூடியதாகும்.
Reviews
There are no reviews yet.