Description
மாந்தர்கள் நூற்களை ஓதியுணர்ந்து எய்துதற்குரிய உறுதிப் பொருள்கள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீட்டைப் பற்றிக் கூறும் நூல்களுள் ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தமும், நாயன்மார்கள் பாடிய பன்னிரு திருமுறைகளும் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் ‘முதல் ஆழ்வார்கள்’ என்று அழைப்பர். இம்மூவரோடு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், திருப்பாணாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரின் வரலாறுகளையும் மிக எளிய நடையில் இந்நூல் எடுத்தியம்புகிறது.
Reviews
There are no reviews yet.