Description
‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்னும் முதுமொழிக்கேற்ப கோயில்கள் என்பவை ஆன்மிகத்துடனும், மக்களின் வாழ்க்கையோடும் மிக நெருங்கிய தொடர்புடையவை. இத்தகைய பெருமைக்குரிய கோயில்களில் உறையும் தெய்வங்கள் சிறப்பாக வழிபடப்பட்டுள்ளதை இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது.
தமிழகக் கலைவரலாற்றில் கோயிற்கலை மிக இன்றியமையாத ஓர் இடத்தை வகிக்கிறது. கோயிற்கலை என்பது பொதுவான ஒரு கலையாக இருப்பினும் அதில் ஒவ்வொரு சமயத்திற்கென குறிப்பிட்ட சில வேறுபாடுகளுடன் கூடிய அமைப்புகள் உள்ளன.
அவ்வகையில் கோயிற்கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, நடுகற்கள், சதிக்கற்கள் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளோடு, சைவம் – வைணவம் பற்றிய கட்டுரைகளும், குடைவரைக் கோயில்கள் பற்றிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் ஆகமங்கள் பற்றிய அறிமுகம், திருவிளையாடற்புராணச் செய்திகள், கோயில் கள ஆய்வு நெறிமுறைகள், தமிழகக் கோயிற் கல்வெட்டுகள் உள்ளிட்ட செய்திகள் குறித்தும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்: அம்பை. லோ.மணிவண்ணன்
Reviews
There are no reviews yet.