Description
சிராப்பள்ளி மாவட்டச் சோழர்காலக் கோயில்களை முழுமையான அளவில் ஆய்வுசெய்து அவற்றின் வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கின் விளைவாய் மலர்ந்துள்ள இந்நூலில் பத்துப் பழங்கோயில்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் திருத்தவத்துறை, திருக்கற்குடி ஆகிய இரண்டு கோயில்களில் கற்குடி, பதிகம்பெற்ற பேறுடையது எனில், தவத்துறை அப்பர் பெருமானால் ‘பண்டெழுவர் தவத்துறை’ என்ற சுட்டல் கொண்டது. கல்வெட்டுகளின் பெருக்கத்தில் இரண்டு கோயில்களுமே ஏறத்தாழ இணையானவை என்றபோதும் காலத்தால் கல்வெட்டுகள் பழைமையான தவத்துறையிலேயே உள்ளன. இரு கோயில் கல்வெட்டுகளுமே மிகச் சிறந்த வரலாற்றுச் செய்திகளை முன் வைக்கிறது. எனினும் தவத்துறை வளாகம், அப்பகுதியில் இருந்து மறைந்த பல திருக்கோயில்களின் எச்சங்களை உள்வாங்கித் தன்னுள் ஒன்றவைத்துக் காப்பாற்றியிருக்கும் பாங்கு அதை ஓர் அருங்காட்சியகமாகவும் ஆவணக்காப்பகமாகவும் உயர்த்துகிறது.
ஆசிரியர்: ரா. அகிலா, மு. நளினி, ரா. கலைக்கோவன்
Reviews
There are no reviews yet.