Description
நம்முடைய வாழ்க்கை நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைகிறது. இந்நம்பிக்கைகளை வளர்த்து வளப்படுத்தப் பல்வேறு சாத்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு அவை நிச்சயம் பலனளிக்கின்றன. நம்முடைய சாத்திரங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை வேதங்கள்தான். எனவே சாத்திரங்கள், தத்தமது விதிவிலக்குகள் மற்றும் பரிகாரங்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ளன. பிறக்கும் நேரத்தை வைத்து ஒருவரது நட்சத்திரம் தீர்மானிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவரது வாழ்க்கையின் இதர காலகட்ட பலன்களை ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள நட்சத்திர பலன்கள் உதவுகின்றன. ‘27 நட்சத்திரக் கோயில்கள்’ என்னும் இந்நூலில் ஒவ்வொரு நட்சத்திரத்தின் அதிதேவதை, பரிகாரம், பரிகாரத் தலத்தின் சிறப்பு, அமைவிடம், தல மரம், தலவரலாறு உள்ளிட்ட பல தகவல்கள் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: கொத்தமங்கலம் லேனா
Reviews
There are no reviews yet.