Availability: In Stock

சண்முகக் கவசம்

280.00

தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

Description

குறிஞ்சிக் கடவுள் என தமிழரால் போற்றப்படும் சிவக்குமரன் திருமுருகனை நினைந்து நெக்குருகப் பாடிய அருளாளர்கள் அநேகர். அத்தோத்திரங்கள் யாவும் இன்னமும் திருக்கோயில்களில் தனிப் பாசுரங்களாகவும், குரு சந்நிதானங்களில் பாராயணம் செய்வதற்கான திருப்பாடல்களாகவும், மேடைகளில் தமிழிசையாகவும், முருக அடியார்களின் அகங்களில் அருளிசையாகவும், இல்லங்களில் மெய்யன்பர்கள் தங்கள் உணர்வுக்கும் வேண்டுதலுக்கும் வடிகால் தேடும் வாஞ்சைமிகு வரிகளாகவும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
பாம்பன் திருமிகு குமரகுருதாச சுவாமிகள் அருளிய “சண்முகக் கவச”த்திற்கு பலர் உகந்த விரிவுரை வழங்கியுள்ளனர். ஆனால் சமய இலக்கிய உலகில் ஒரு புதிய வடிவத்தில், புதுமைமிகு கோணத்தில் சண்முகக் கவசத்திற்கு திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் ‘பொருளுரை’ ஈன்றுள்ளது நம்மை வியப்பில் திக்குமுக்காட வைக்கின்றது.

ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

Additional information

Year of Publishing

2024

Pages

288

Printers

அரசு ஆர்ட்ஸ், 78, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை–14.

Publisher

இந்துசமய அறநிலையத்துறை பதிப்பகம்

Author

Language

Tamil

select-format

Hard Bound

Reviews

There are no reviews yet.

Be the first to review “சண்முகக் கவசம்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன