Description
உலக முதல் மொழியாம் தமிழ் மொழியில் வேதங்கள் ஆகமங்கள் உண்டா? என்பது பற்றி தமிழர்களே அறியாமல் இருப்பதே அறியாமையின் உச்சம் அல்லது தமிழ் இனத்தின் அவலம் எனலாம். இதற்கு முன் எத்தனையோ மலைக்க வைக்கும் ஆற்றல் பெற்ற தமிழ் அறிஞர்கள் எல்லோரும் வந்து சென்றுள்ளனர். அவர்களில் பலர் தமிழில் தான் வேதமும் ஆகமமும் தோன்றின என்று அறிவுறுத்தி வந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவராகப் புகழ்பெற்ற கா. சுப்பிரமணியனார் அவர்களைக் கூறலாம். அவர் இதற்கென “திருநான்மறை விளக்கம்” என்ற பெரிய நூலை எழுதி 1920களில் வெளியிட்டார். தமிழரின் வேதம் இது, தமிழரின் ஆகமம் இது என்று நிறுவுவதே இந்நூல்.
ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்











Reviews
There are no reviews yet.