
ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள் பாகம் 2
0₹500.00பீஷ்மர் பாரதப் போரில் பத்தாம் நாள் யுத்தத்தில் அம்புப் படுக்கையில் கிடக்கலானார். அந்த நிலையில் கிடக்கும் பீஷ்மர் உடம்பிலிருந்து துரியோதனனிடம் சாப்பிட்ட உணவு எல்லாம் ரத்தமாக வெளியேறுகிறது. ஆயினும் உடம்பு தீயாக எரிகிறது. அதனைப் போக்கிக் கொள்ள அவரால் முடியவில்லை; அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார். அவரை வணங்க பீஷ்மரால் முடியவில்லை. அச்சுதனை உள்ளத்தில் அர்ச்சனை செய்து அவனின் ஆயிரம் திருநாமங்களையும் அவர் சொல்கின்றார். அந்த நாமங்களை அவர் சொல்லச்சொல்ல அவர் உடம்பில் ஏற்பட்ட துன்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முடிவில் இல்லாமல் போய்விடுகிறது.

ஆலய நிர்மாண பிம்பலக்ஷ்ண சிற்ப நூல்
0₹500.00தமிழக திருக்கோயில்களில் உள்ள கற்சிற்பங்களுக்கான இலக்கணமாக இந்நூல் அமைகிறது.
ஆசிரியர்: எம்.முத்தையா ஸ்தபதி

ஆழ்வார்கள் திருவரலாறு
0₹280.00பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் ‘முதல் ஆழ்வார்கள்’ என்று அழைப்பர். இம்மூவரோடு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்,
மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், திருப்பாணாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரின் வரலாறுகளையும் மிக எளிய நடையில் இந்நூல் எடுத்தியம்புகிறது.

ஆறுமுகமான பொருள்
0₹100.00ஆறுமுகம் – அறுபடை வீடு – ஆறெழுத்து மந்திரம் ஆகியவற்றோடு முருகப் பெருமானின் திருவுருவம் உள்ளிட்டவையும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்: தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான்

இசையும் யாழும்
0₹250.00இசை தோன்றிய வரலாறு, யாழின் தொன்மை, அதன் வகைகள், இசைவாணர்கள், பாணர்கள், பாடினிகள் போன்றோரைப் பற்றி இந்நூலில் அறியலாம்.
ஆக்கம்: பதிப்புக் குழு

இந்தியக் கட்டடக்கலை வரலாறு
0₹300.00கோயில்களின் தோற்றம் – வளர்ச்சி, குடைவரைக் கோயில்கள், கட்டடக்கலைகளுக்கான ஒரு தகவல் களஞ்சியம் இந்நூல்.
ஆசிரியர்: அம்பை. லோ.மணிவண்ணன்

இந்து சமய தத்துவம்
0₹320.00Chidambaram is also known as ‘Thillaivanam’ a forest of Thillai trees. The Thillai tree’s scientific name is Excoecaria agallocha. As this holy place was surrounded by Thillai trees in olden days, the nearby town then was also known by the name Thillai. This book is containing all twelve chapters-equivalently numbered to match the twelve scripts. Prostrations to the holy feet of Lord Nataraja

இந்து மத இணைப்பு விளக்கம்
0₹280.00இந்து மதத்தின் தத்துவங்கள், கிரியைகளின் விளக்கங்கள், பெருமைகள் மற்றும் ஆலய வழிபாடு, தோத்திரமாலை முதலானவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: மகாவித்துவான் கே.ஆறுமுக நாவலர்

இந்து மதம் இது என்ன சொல்கிறது?
0₹576.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்
ஆசிரியர்: கோ. செல்வம்

இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
0₹160.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: திரு. வி. கலியாணசுந்தரனார்

இராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான்
0₹1,850.00இராமானுஜரின் வரலாற்றையும், இந்து மதத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் எடுத்துக் கூறும் விதமாக கலைஞரின் கைவண்ணத்தில் உருவான இராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான்
ஆசிரியர் : கலைஞர் மு.கருணாநிதி

இறைவனின் எண்வகை வடிவங்கள்
0₹260.00இறைவனின் எண்வகை வடிவங்கள், சமயச் சட்டங்கள், சிவலிங்க வழிபாடு, படிமங்களின் இலக்கணம், உருவ வழிபாட்டின் தொடக்கம் போன்றவை இந்நூலில் விளக்கம்பெற்றுள்ளன.
ஆக்கம்: கழகவெளியீடு

ஊரும் பேரும் – கல்வெட்டுகளில் கோயில்களும் கொடைகளும் (செய்யாறு வட்டம்)
0₹580.00ஒவ்வொரு நிலத்திலும் வாழ்கின்ற மனிதர் அந்தந்தப் பகுதிகளுக்கு நிலத்தின் பெயர்களையொட்டியே பெயர் சூட்டினர். குறிஞ்சி நில ஊர் குறிச்சி எனப்பட்டது. முல்லை நில ஊர் பாடி எனப்பட்டது. பாலை நில ஊர் கோடு என்று பெயர் பெற்றது. மருத நில ஊர்கள் ஊர், குடி, கூடல் எனப்பட்டன. நெய்தல் நிலத்துப்பகுதிகள் பாக்கம், பட்டினம், நெய்தலூர் என அழைத்தனர்.
ஆசிரியர்: சா. கிருஷ்ணமூர்த்தி

ஔவையார் வரலாறு
0₹60.00ஔவையாரின் பிறப்பு, அதியமான், பாரியுடன் ஔவை கொண்ட நட்பு, ஔவையாரின் தொண்டு முதலான பல செய்திகளைக் கொண்டது இந்நூல்.
ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்

கடவுள் காட்சியும் தாயுமானவரும்
0₹40.00குமரன் ஆண்டுமலரில் (1928) திரு.வி.க. எழுதிய ‘கடவுள் காட்சி’ என்னும் கட்டுரையே இந்நூலாக உருவாக்கப்பட்டுள்ளது. தாயுமானவர் அருளிய “ஐவகை யெனும் பூதம்” என்னும் பாடலின் பொருள் விரிவாக்கக் கட்டுரையே நூலாய் உருக்கொண்டது. அதனால் இந்நூலுக்கு “கடவுள் காட்சியும் தாயுமானாரும்” என்னும் முடி சூட்டப்பட்டது.
ஆசிரியர்: திரு. வி. கலியாணசுந்தரனார்

கண்ணப்ப சுவாமிகள் வரலாறு
0₹80.00கண்ணப்ப நாயனாரின் இறை பக்தி, வரலாறு, புகழ்ப்பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மேலும் திருக்கண்ணப்ப தேவர் திருமறமும், கீர்த்தனங்களும் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: கவிஞர் சா.சரவணனார்

கந்த புராணக்கதை
0₹100.00முருகப் பெருமான் அசுரர்களை வீழ்த்தியது, தேவயானை, வள்ளி ஆகியோரை மணந்தது போன்ற வரலாறுகளைக் கொண்டுள்ளது இந்நூல்.
ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்

கந்தவேள் கருணை
0₹550.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆக்கம்: பதிப்புக் குழு

கந்தன் கனியமுதம்
0₹240.00பழம்பெரும் கடவுளான முருகனின் பெருமை, அவரின் அற்புதங்கள். சண்முக தத்துவம் போன்றவற்றை உணர்த்தும் விதமாக இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: மா.கி.ரமணன்





















